ரூல்ஸை திரும்ப பெற்ற கமல்.. பிக் பாஸில் இனி அதை செய்தால் தண்டனை
பிக் பாஸ் 7ம் சீசன் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என பூர்ணிமா கேங் சொன்ன குற்றச்சாட்டுக்காக கமல் பிரதீப் ஆண்டனியை ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றிவிட்டார்.
அது சரியான முடிவு அல்ல என பிரதீப்புக்கு சமூக வலைத்தளங்களில் ஆதரவு பெருகி வருகிறது. அது ஒருபுறம் இருக்க கமல் ஒரு முக்கிய முடிவை பிக் பாஸ் வீட்டில் அறிவித்து இருக்கிறார்.
நாமினேஷன் பற்றி பேச கூடாது
நாமினேஷன் பற்றி பேசலாம் என பிக் பாஸ் கொடுத்த அனுமதியை தவறாக பயன்படுத்தி பூர்ணிமா, மாயா உள்ளிட்ட சிலர் மொத்தமாக திட்டம்போட்டு நாமிநேஷனில் யாரெல்லாம் வர வேண்டும் என குறிவைத்து அதன் பின் நாமினேட் செய்கின்றனர்.
இது ஷோவை பார்ப்பவர்களுக்கு சுவாரஸ்யமாக இல்லை என கமல் கூறி இருக்கிறார். மேலும் அந்த ரூல்ஸ் வாபஸ் பெறப்படுகிறது என்றும் அறிவித்தார்.
நாமினேஷன் பற்றி பிக் பாஸ் வீட்டில் யாராவது பேசினால், இனி அது தண்டனைக்கு உரிய குற்றம் என கமல் எச்சரித்தும் உள்ளார்.