முதல் நாளே கதறிய ஜிபி முத்து! கமல் அப்படி என்ன செய்தார் பாருங்க
ஜிபி முத்து
டிக்டாக் மற்றும் யூடியூப் மூலமாக பிரபலம் ஆன ஜிபி முத்து தற்போது பிக் பாஸ் 6ம் சீசன் போட்டியாளராக வந்திருக்கிறார். அவர் தான் முதல் ஆளாக பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்தார்.
அப்போது யாருமே வீட்டுக்குள் இல்லாததை பார்த்து ஜிபி முத்து ஷாக் ஆனார். 'என்ன யாருமே இல்லை, பயமா இருக்கே' என சொல்லி நீண்ட நேரம் பயத்துடன் பேசி கொண்டிருந்தார்.
கலாய்த்த கமல்
அப்போது கமல் டிவியில் வந்து அவரிடம் பேசினார். ஒரு தொழில்நுட்ப கோளாறு காரணாமாக இன்று நீங்கள் மட்டும் தான் வீட்டில் இருக்க போறீங்க, அது சரியாக விடியற்காலை 4 மணி கூட ஆகலாம் என கூறுகிறார்.
அதை கேட்டு பதறிப்போன ஜிபி முத்து கையெடுத்து கும்பிட்டு யாரையாவது அனுப்புங்க என கெஞ்சி கேட்கிறார். கமல் கொஞ்ச நேரம் அவரை கலாய்த்துவிட்டு அதன் பின் தான் அடுத்த போட்டியாளரை வீட்டுக்குள் அனுப்பினார்.
நயன்தாரா - விக்னேஷ் சிவனுக்கு பிறந்த இரட்டை குழந்தைகள்! திருமணம் முடிந்து 4 மாதத்தில் சர்ப்ரைஸ்