ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன வேட்டையாடு விளையாடு பட நடிகை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்
கமலினி முகர்ஜீ
கமல் ஹாசன் நடிப்பில் கடந்த 2006ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் வேட்டையாடு விளையாடு. இப்படத்தில் கமலுடன் இணைந்து ஜோதிகா, கமலினி முகர்ஜி, டேனியல் பாலாஜி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
இதில் கமலின் பிளாஷ் பேக் காட்சியில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தவர் நடிகை கமலினி முகர்ஜி. தமிழில் இவர் நடித்த முதல் திரைப்படம் வேட்டையாடு விளையாடு தான். இதற்கு முன் இந்தியில் வெளிவந்த Phir Milenge படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
இவர் கடைசியாக தமிழில் வெளிவந்த இறைவி திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன்பின் மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளிவந்த புலிமுருகன் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் புகைப்படம்
இதன்பின் எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்காத நடிகை கமலினி முகர்ஜியின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ள நடிகை கமலினி முகர்ஜியின் புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..
You May Like This Video