சீனாவில் வசூலை குவித்த சிவகார்த்திகேயனின் கனா.. தமிழ் படத்திற்கு இப்படியொரு ரெஸ்பான்ஸா
கனா
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளிவந்த முதல் திரைப்படம் கனா. அருண்ராஜா காமராஜ் இயக்கிய முதல் படமும் இதுவே ஆகும்.
இப்படத்தில் சோலோ ஹீரோயினாக நடித்து, அசத்தியிருந்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

பெண்களின் கிரிக்கெட் மற்றும் விவசாயத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றிபெற்றது.
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் வெற்றிபெற்ற இப்படம், சமீபத்தில் சீனா மொழியில் டப் செய்யப்பட்டு திரையரங்கில் வெளிவந்தது.

சீனா பாக்ஸ் ஆபிஸில் கனா
இந்நிலையில், சீனா பாக்ஸ் ஆபிஸில் கனா திரைப்படம், இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ. 1.4 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழில் இருந்து டப் செய்யப்பட்டு, சீனா மொழியில் வெளிவந்துள்ள கனா திரைப்படத்திற்கு, இவ்வளவு பெரிய ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளது மாபெரும் விஷயம் தான்.
பீஸ்ட் சென்சார் ரிசல்ட் வெளியானது! ரன்டைம் விவரம் இதோ