கங்கனா தான் புது சந்திரமுகியா? உண்மை இதுதான்
சந்திரமுகி 2
சூப்பர்ஸ்டார் ரஜினி, ஜோதிகா, நயன்தாரா, பிரபு, வடிவேலு என பலர் நடித்து சூப்பர்ஹிட் ஆன படம் சந்திரமுகி. அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது பி.வாசு இயக்கி வருகிறார்.
லாரன்ஸ், வடிவேலு, ராதிகா, சுபிக்ஷா உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்து வருகிறார்கள். ஷூட்டிங் சில மாதங்களுக்கு முன்பு மைசூரில் தொடங்கியது.
கங்கனா தான் சந்திரமுகியா?
சந்திரமுகி முதல் பாகத்தில் ஜோதிகா தான் சந்திரமுகியாக மிரட்டி இருப்பார். இரண்டாம் பாகத்தில் சந்திரமுகி ரோலில் யாரை நடிக்க வைப்பது என பி.வாசு தொடர்ந்து பரிசீலனையில் இருந்தார். பல நடிகைகள் பெயர் கிசுகிசுக்கப்பட்டது. தற்போது கங்கனா தான் அந்த ரோலுக்கு தேர்வாகி இருக்கிறார்.
கங்கனா ஹிந்தியில் ஏற்கனவே பல வுமன் சென்ரிக் படங்களில் நடித்து இருக்கிறார். அவர் ஹீரோ இருக்கும் கதையில் நடிப்பாரா என முதலில் பி.வாசு தயங்கினாராம். ஆனால் கதை சொல்லும் போது கங்கனா உடனே அந்த ரோலில் நடிக்க ஒப்புக்கொண்டாராம்.
சந்திரமுகி படத்தை ஏற்கனவே பார்த்ததும், 2ம் பாக கதை அதிகம் பிடித்துவிட்டதும் தான் கங்கனா உடனே ஓகே சொல்ல காரணம் என தெரிகிறது.
சிம்ப்ளி வேஸ்ட், அட்டகத்தி.. அசீமை அசிங்கப்படுத்தும் பிக் பாஸ் போட்டியாளர்கள்