சந்திரமுகி 2 படத்தில் இந்த பாலிவுட் நடிகை நடிக்கிறாரா? இவர் தான் சந்திரமுகியா
சந்திரமுகி 2
ரஜினிகாந்த் நடித்து கடந்த 2005ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சந்திரமுகி. இப்படம் தமிழ் திரையுலகம் எதிர்பார்க்காத வெற்றியை கொடுத்தது.
இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது. ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடித்து வரும் இப்படத்தை பி. வாசு இயக்கி வருகிறார். வடிவேலு, ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
பாலிவுட் நடிகை
அதன்படி, சந்திரமுகி 2 படத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாத் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார் என தகவல் தெரிவிக்கின்றனர். இதனால், இவர் தான் சந்திரமுகி கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ஆனால், இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்று தெரியவில்லை. நடிகை கங்கனா தமிழில் வெளிவந்த தாம் தூம், தலைவி ஆகிய படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.