தமிழ்நாட்டில் 6 நாட்களில் கங்குவா படம் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா
கங்குவா
2024ஆம் ஆண்டு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் கங்குவா. அதுவும் முதல் முறையாக இயக்குனர் சிறுத்தை சிவா மற்றும் சூர்யாவின் கூட்டணி என்பதால், ரசிகர்கள் அளவுகடந்த எதிர்பார்ப்பை படத்தின் மீது வைத்திருந்தனர்.
கடந்த வாரம் 14ஆம் தேதி வெளிவந்த கங்குவா படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், முதல் நாள் வசூலில் பட்டையை கிளப்பியது. ஆனால், அதன்பின் வசூலில் சரிவை சந்திக்க துவங்கியது.
உலகளவிலும் சரி, தமிழ்நாட்டிலும் சரி கங்குவா படத்திற்கு எதிர்பார்த்த வசூல் கிடைக்கவில்லை என்பதே, திரை வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.
தமிழக வசூல்
இந்த நிலையில், சூர்யாவின் கங்குவா திரைப்படம் தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இப்படம் 6 நாட்களில் தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 33 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் இப்படத்தின் வசூல் எந்த அளவிற்கு இருக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

ஆரம்பத்தில் புற்றுநோயின் அறிகுறிகள் எப்படி இருக்கும் தெரியுமா? அவசியம் தெரிஞ்சுக்கோங்க..! IBC Tamilnadu
