கங்குவா படம் 100 கோடி நஷ்டமா.. உண்மையை உடைத்து பேசிய பிரபலம்
கங்குவா
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் சூர்யா. இவர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் கங்குவா.
இப்படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்க, ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரித்து இருந்தார். இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து பாபி தியோல், திஷா பாட்னி, கருணாஸ், நட்டி நட்ராஜ் என பலரும் நடித்திருந்தனர்.
பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனால் இப்படத்தின் வசூலும் பாதிக்கப்பட்டது.
100 கோடி நஷ்டமா
கங்குவா படம் இதுவரை உலகளவில் ரூ. 108 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ள நிலையில், ரூ. 100 கோடிக்கும் மேல் இப்படம் நஷ்டம் என இணையத்தில் தகவல் பரவி வருகிறது. இந்த நிலையில், இதுகுறித்து இயக்குனரும், தயாரிப்பாளரும், நடிகருமான சித்ரா லக்ஷ்மணன் ஓபனாக பேசியுள்ளார்.
இதில் "கங்குவா படத்தின் மொத்த பட்ஜெட் ரூ. 170. படம் வெளிவருவதற்கு முன்பே ஓடிடி, சாட்டிலைட் விற்பனை செய்யப்பட்டு விட்டது. இதன்மூலம் கணிசமான தொகை தயாரிப்பாளருக்கு கிடைத்துவிட்டது. திரையரங்கம் மூலம் பெரிய தொகை வசூலாக வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது நடக்கவில்லை. கங்குவா தோல்வி படமாக தான் அமைந்தது. அப்படி இருந்தும் கூட கங்குவா படத்திற்கு பெரிய நஷ்டம் எதுவும் ஏற்படவில்லை" என கூறியுள்ளார்.
You May Like This Video