USA-வில் கங்குவா படத்திற்கு கிடைத்துள்ள மாஸ் ஓப்பனிங்.. ப்ரீ புக்கிங் வசூல்
கங்குவா
2024ஆம் ஆண்டு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டாப் 5 திரைப்படங்களில் ஒன்று சூர்யாவின் கங்குவா. முதல் முறையாக சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார்.
பாலிவுட் நட்சத்திரங்களான பாபி தியோல், திஷா பாட்னி இப்படத்தில் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
நேற்று கங்குவா படத்தின் இசை வெளியிட்டு விழா மிகவும் பிரமாண்டமான முறையில் நடைபெற்று முடிந்தது. இப்படத்திற்காக சூர்யா முழுமூச்சாக ப்ரோமோஷனில் இறங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ப்ரீ புக்கிங்
வருகிற நவம்பர் 14ஆம் தேதி வெளிவரவுள்ள கங்குவா படத்தின் USA ப்ரீ புக்கிங் துவங்கியுள்ள நிலையில், இதுவரை ரூ. 3.8 லட்சம் வரை வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம் ரிலீஸுக்கு முன் ப்ரீ புக்கிங்கில் கங்குவா படம் எவ்வளவு வசூல் செய்யப்போகிறது என்று.