பாரதி கண்ணம்மா புகழ் சீரியல் நடிகை கண்மணிக்கு இப்படியொரு பிரச்சனையா?- சோகமான பதிவு
விஜய் தொலைக்காட்சியில் ஒரு காலத்தில் TRP முதல் இடத்தை பிடித்து வந்த தொடர் பாரதி கண்ணம்மா. பிரவீன் பென்னட் இயக்கிவரும் இந்த தொடரை மக்கள் இப்போது வெறுத்துவிட்டார்கள் என்றே கூறலாம்.
சீரியலை முடிக்க கூடாது என்ற எண்ணத்தில் ஏதேதோ கதையில் புகுத்தி வருகிறார்கள்.
அகிலன்-அஞ்சலி வெளியேற்றம்
இந்த தொடரில் அகிலன் வேடத்தில் நடித்தவர் முதலில் தொடரில் இருந்து வெளியேறினார், காரணம் அவருக்கு பட வாய்ப்புகள் அதிகம் வந்தது. பின் தொடரின் முக்கிய நாயகியான ரோஷினி விலக அவருக்கு பதில் வினுஷா என்பவர் நடிக்கிறார். ஆனால் ரோஷினி தொடரில் இருந்து விலகியதற்கான முக்கிய காரணம் தெரியவில்லை.
அடுத்ததாக அஞ்சலி வேடத்தில் நடித்துவந்த கண்மணி வெளியேறினார், காரணம் அவருக்கு லீட் ரோலில் ஜீ தமிழில் அமுதா என்ற தொடரில் நடிக்கிறார். இந்த தொடர் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற தொடங்கி இருக்கிறது.
அது மட்டும் இல்லாமல் கண்மணி ஜீ தமிழிலேயே சூப்பர் குயின் என்ற நிகழ்ச்சியிலும் பங்குபெற்று வருகிறார்.
கண்மணி போட்ட பதிவு
இந்த நேரத்தில் தான கண்மணி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், தப்பான ஆட்களுக்காக ஒரு போதும் வேலை செய்யாதீர்கள் என்ற ஒரு வாக்கியத்தை குறிப்பிட்டு பின்னணியில் பாரதி கண்ணம்மா நீ என தொடங்கும் பாடல் ஒன்றை இணைத்துள்ளார்.
அவரின் இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது, ஏதோ பிரச்சனையில் தான் அவர் சிக்கியுள்ளார். எதனால் இந்த பதிவு என நிறைய கேள்விகள் எழுப்பி வருகிறார்கள்.
விஜய் தொலைக்காட்சியில் வரப்போகும் புதிய சீரியல்- இவர்களா நடிக்கிறார்கள்