ஹேமா என் மகள்.. உண்மையை போட்டுடைத்த கண்ணம்மா! பாரதி கண்ணம்மாவில் புது ட்விஸ்ட்
விஜய் டிவி பாரதி கண்ணம்மாவில் ரசிகர்கள் எதிர்பார்த்த ட்விஸ்ட் ஒருவழியாக வந்துவிட்டது. லேட்டஸ்ட் ப்ரோமோ வீடியோவை நீங்களே பாருங்க
பாரதி கண்ணம்மா
தற்போது பாரதி கண்ணம்மா சீரியல் பார்க்கும் ரசிகர்கள் எல்லோரிடமும் இருக்கும் கேள்வி, எப்போ டிஎன்ஏ டெஸ்ட்எடுப்பீங்க, சீரியலை எப்போ முடிப்பீங்க என்பது தான்.
அதை வெளிப்படையாக சமூக வலைத்தளங்களால் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த வாரம் ஒரு ட்விஸ்ட் வந்திருக்கிறது.
ஹேமா என் மகள்.. பாரதிக்கு உண்மையை சொன்ன கண்ணம்மா
ஹேமா பிறந்தநாள் பார்ட்டியில் அவளது அம்மா யார் என சொல்வதாக பாரதி வாக்கு கொடுத்து இருந்தார். அதன்படி அவர் ஒரு ஓவியத்தை காட்டி 'உன் அம்மா இப்படி தான் இருப்பார்' என கூறுகிறார்.
அதை பார்த்து ஷாக் ஆகும் கண்ணம்மா.. எனக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தது, அதில் ஒருவர் தான் ஹேமா என பாரதியிடம் கூறுகிறார்.
அது உண்மை தான் என பாரதியின் அம்மாவும் ஒப்புக்கொள்கிறார். இதை கேட்டு பாரதி அதிர்ச்சியில் நிற்க, ஹேமா தனக்கு அம்மா கிடைத்த மகிழ்ச்சியில் இருக்கிறார். வில்லி வெண்பாவும் அதிர்ச்சியாகி நிற்கிறார்.
ப்ரோமோ இதோ
என்னை அசிங்கப்படுத்திடீங்க.. செம்பருத்தி சீரியல் வில்லி ஜீ தமிழ் டிவி மீது அதிர்ச்சி புகார்