காந்தாரா சாப்டர் 1 படப்பிடிப்பு முடிந்தபின் நடிகர் மரணம்.. வருத்தத்துடன் படக்குழு செய்த விஷயம்
காந்தாரா
காந்தாரா சாப்டர் 1 படம் கடந்த வாரம் வெளிவந்து மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் இதுவரை உலகளவில் ரூ. 340+ கோடி வசூல் செய்துள்ளது.
ரிஷப் ஷெட்டி இப்படத்தை இயக்கி ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் ருக்மிணி வசந்த் இப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தனர்.
ராகேஷ் பூஜாரி
காந்தாரா சாப்டர் 1 படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்து அனைவரையும் சிரிக்க வைத்தவர் நடிகர் ராகேஷ் பூஜாரி. இவர் காந்தாரா சாப்டர் 1 படப்பிடிப்பு முடிந்து 20 நாட்களுக்கு பின், மாரடைப்பால் இறந்துள்ளார்.
துரதிர்ஷ்டவசமாக தனது நண்பரின் திருமணத்தில் அவர் கலந்துகொண்டபோது இப்படி நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இவருடைய மரணத்திற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் படத்தின் துவக்கத்தில் படக்குழு இரங்கல் தெரிவித்து இவருடைய புகைப்படத்தை போட்டிருந்தனர்.