கூலி படத்தை விட அதிக வசூல் செய்த காந்தாரா சாப்டர் 1.. பாக்ஸ் ஆபிஸ் விவரம்
காந்தாரா சாப்டர் 1
2025ஆம் ஆண்டு ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த திரைப்படங்களில் ஒன்று காந்தாரா சாப்டர் 1. கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி இப்படத்தை இயக்கி நடித்திருந்தார்.
இப்படத்தை Hombale பிலிம்ஸ் தயாரிக்க ருக்மிணி வசந்த் கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் ஜெயராம், குல்ஷன், ராகேஷ் பூஜாரி ஆகியோர் இப்படத்தில் நடித்திருந்தனர். கடந்த வாரம் திரைக்கு வந்த இப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
கூலி - காந்தாரா
இதுவரை உலகளவில் ரூ. 415+ கோடி வசூலை இப்படம் செய்துள்ளது. உலகளவில் வசூலில் பட்டையை கிளப்பி வரும் காந்தாரா சாப்டர் 1 படம், கேரளாவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இப்படம் கேரளாவில் மட்டுமே ரூ. 26+ கோடி வசூல் செய்துள்ளது. இதன்மூலம் கூலி திரைப்படத்தின் கேரள வசூலை விட காந்தாரா அதிக வசூல் செய்துள்ளது. கூலி கேரளாவில் ரூ. 25.5 கோடி வசூல் செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.