காந்தாரா சாப்டர் 1 தமிழ்நாட்டில் வெற்றியா? தோல்வியா? வசூல் விவரம் இதோ
காந்தாரா சாப்டர் 1
கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து வெளிவந்த திரைப்படம் காந்தாரா சாப்டர் 1. இப்படத்தில் ருக்மிணி வசந்த், ஜெயராம், குல்ஷன் என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று உலகளவில் மாபெரும் வெற்றியடைந்துள்ளது.
உலகளவில் வசூலில் வேட்டையாடி வரும் காந்தாரா சாப்டர் 1 திரைப்படம் தமிழ்நாட்டில் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது? அதில் லாபம் கிடைத்து வெற்றிபெற்றதா? அல்லது நஷ்டமடைந்து தோல்வியை தழுவியதா என்று உங்களுக்கு தெரியுமா? அதைப்பற்றிதான் இந்த பதிவில் பார்க்கவிருக்கிறோம்.
தமிழ்நாட்டில் வெற்றியா தோல்வியா
காந்தாரா சாப்டர் 1 திரைப்படத்தை தமிழ்நாட்டில் ரூ. 32 கோடிக்கு வாங்கியுள்ளனர். இப்படம் இதுவரை ரூ. 70 கோடி தமிழ்நாட்டில் மட்டுமே வசூல் செய்துள்ளது. இதன்மூலம் பிரேக் ஈவன் ஆகியுள்ளது. இதனால் இனி வரும் வசூல் அனைத்துமே லாபம்தான். ஆகையால் காந்தாரா சாப்டர் 1 தமிழ்நாட்டில் வெற்றியடைந்துள்ளது.