ரூ. 16 கோடி பட்ஜெட் ரூ. 200 கோடி வசூல்.. மாஸ் காட்டும் கன்னட திரையுலகம்
கன்னட சினிமா
கன்னட திரையுலகில் இருந்து தொடர்ந்து வெளிவரும் திரைப்படம் இந்தியளவில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.
முதலில் யாஷ் நடிப்பில் வெளிவந்த கே.ஜி.எஃப் 1 மற்றும் 2 இரு திரைப்படம் சூப்பர்ஹிட் ஆனது. முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் உலகளவில் சுமார் ரூ. 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

இதை தொடர்ந்து ரக்ஷித் ஷெட்டி நடிப்பில் வெளிவந்த 777 சார்லி திரைப்படமும் மாபெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தை பார்த்துவிட்டு கண்கலங்காத நபர்களே இருக்க முடியாது. அந்த அளவிற்கு அனைவரின் மனதையும் இப்படம் கவர்ந்தது.

காந்தாரா வெற்றி
இப்படத்தை தொடர்ந்து அண்மையில் வெளிவந்துள்ள காந்தாரா திரைப்படமும் கன்னட திரையுலகின் மற்றொரு அருமையான படைப்பாக அமைந்துள்ளது. ரிஷப் ஷெட்டி நடித்திருந்த இந்தியளவில் அனைவரும் இப்படத்தை பாராட்டி வருகிறார்கள்.

இந்நிலையில், ரூ. 16 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட தற்போது வரை உலகளவில் ரூ. 200 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இதுவே இப்படத்தின் மாபெரும் வெற்றியை உறுதி செய்துள்ளது.
சிதைக்கப்பட்ட 10,000க்கும் மேற்பட்ட இலக்குகள்: நிலைகுலைந்து நிற்கும் ஈரான்: அமெரிக்கா தகவல் News Lankasri
சூடுபிடிக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்: திமுக-வின் சூப்பர் பிளான்! பிரசாரத்தை தொடங்கும் ஸ்டாலின் IBC Tamilnadu