ராஷ்மிகா உடன் நடிக்க மறுத்த காந்தாரா ஹீரோ? இதுதான் பிரச்சனையா
காந்தாரா படத்தின் மூலமாக தற்போது புகழின் உச்சத்திற்கே சென்றிருக்கிறார் ரிஷப் ஷெட்டி. அவர் இயக்கி நடித்த இந்த படம் வெறும் 15 கோடி பட்ஜெட்டில் உருவாகி இருந்தாலும் தற்போது 400 கோடி ரூபாய்க்கும் மேலாக வசூலித்து சாதனை படைத்து இருக்கிறது.
மேலும் இந்த படம் நாளை ஓடிடியில் வெளியாக இருக்கும் நிலையில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நடிகைகளை பிடிக்கவில்லை
இந்நிலையில் சமீபத்தில் ஒரு தெலுங்கு இணையதளத்திற்கு ரிஷப் ஷெட்டி அளித்திருக்கும் பேட்டியில் அவரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. 'ராஷ்மிகா, சமந்தா, கீர்த்தி சுரேஷ், சாய் பல்லவி.. இந்த நடிகைகளில் யாருடன் நடிக்க விரும்புகிறீர்கள்?' என கேட்கப்பட்டது.
அதற்கு பதில் சொன்ன அவர் "நான் ஸ்கிரிப்ட் முடிவான பிறகு தான் நடிகர்களை தேர்வு செய்வேன். அது மட்டுமின்றி நான் புதுமுகங்கள் உடன் பணியாற்ற தான் விரும்புவேன். அவர்களுக்கு தான் எந்த பிரச்னையும் இருக்காது. இந்த நடிகைகளை எனக்கு பிடிக்கவில்லை. ஆனால் சாய் பல்லவி, சமந்தா ஆகியோரின் நாடிபி எனக்கு பிடிக்கும்" என கூறி இருக்கிறார்.
ராஷ்மிகா மந்தனாவை அறிமுகப்படுத்திய இயக்குனர் ரிஷப் ஷெட்டி தான் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போதைய பேட்டியில் அவரை பிடிக்காது என ஓப்பனாக கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ராஷ்மிகாவின் முன்னாள் காதலர் இவர்து நெருங்கிய நண்பர் என்பதும் கூடுதல் தகவல். சமீபத்தில் ராஷ்மிகா அளித்த பேட்டி ஒன்றில் தனது முதல் படம் பற்றி பேசிய விஷய்ம் தான் ரிஷப் ஷெட்டிக்கு கோபத்தை ஏற்படுத்தி இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
அண்ணன் பாசம்.. ஐஸ்வர்யா ராஜேஷ் பிக் பாஸ் மணிகண்டனுக்காக செய்திருக்கும் விஷயம்