நயன்தாரா - கரண் ஜோகர் சர்ச்சை.. வெளுத்து வாங்கிய ரசிகர்களுக்கு விளக்கம் கொடுத்த கரண் ஜோகர்
கரண் ஜோகர் சர்ச்சை
பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒருவர் காஃபி வித் கரண். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் தற்போது துவங்கியுள்ளது. இதன் மூன்றாவது எபிசோடில் நடிகர் அக்ஷய் குமார் மற்றும் நடிகை சமந்தா கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளர் கரண் ஜோகர், சமந்தாவிடம் தென்னிந்திய திரையுலகில் யார் நம்பர் 1 நடிகை என்ற கேள்வியை முன் வைத்தார். இதற்க்கு பதிலளித்த சமந்தா ' நயன்தாரா தான் தென்னிந்திய அளவில் நம்பர் 1 நடிகை ' என்று கூறினார்.
சர்ச்சைக்கு விளக்கம்
இதற்கு கரண் ஜோகர் நயன்தாராவின் பெயரை என்னுடைய லிஸ்டில் இல்லை என்று கூறினார். இதை பார்த்த நயன்தாராவின் ரசிகர்கள் கரண் ஜோகரை சமூக வலைத்தளத்தில் வெளுத்து வாங்கி வருகிறார்கள். இதனால், இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக விளக்கம் கொடுத்துள்ளார் கரண் ஜோகர்.
Ormax எனும் நிறுவனத்திடம் இருந்து தனக்கு கிடைத்த பட்டியலில் நம்பர் 1 நடிகை என்று சமந்தாவின் பெயர் தான் குறிப்பிட்டு இருந்தது, அதை வைத்து தான், கூறியதாகவும். அதை நயன்தாராவின் ரசிகர்கள் தவறாக புரிந்துகொண்டதாகவும் கரண் ஜோகர் விளக்கமளித்துள்ளார்.
இதன்முலம் இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. நயன்தாரா தற்போது அட்லீ இயக்கத்தில் ஷாரூக்கானுடன் இணைந்து ஜவான் எனும் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த புகைப்படத்தில் இருக்கும் முன்னணி நட்சத்திரம் யார் தெரியுமா.. இதோ பாருங்க

ஜேர்மன் பொதுத் தேர்தல் முடிவுகள் SPD கட்சியினருக்கு கசப்பானது! பிரெடெரிக் மாட்ஸுக்கு சேன்சலர் ஸ்கோல்ஸ் வாழ்த்து News Lankasri

திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட DJ..குதிரையில் வந்த மணமகனுக்கு நேர்ந்த கொடூரம் - பகீர் பின்னணி! IBC Tamilnadu
