வாயை கொடுத்து மாட்டிக்கொண்ட கரீனா கபூர்! வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
நடிகை கரீனா கபூர் தற்போது நெட்டிசன்கள் கிண்டலுக்கு ஆளாகி இருக்கிறார்.
லால் சிங் சத்தா
அமீர் கான் மற்றும் கரீனா கபூர் நடிப்பில் நேற்று முன்தினம் லால் சிங் சத்தா படம் ரிலீஸ் ஆனது. அந்த படத்திற்கு மிக மோசமான ரெஸ்பான்ஸ் தான் கிடைத்து இருக்கிறது.
மிக பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் முதல் நாளில் வெறும் 12 கோடி மட்டுமே வசூலித்து இருக்கிறது. இந்த படத்தை புறக்கணிக்க வேண்டும் என சமூக வலைத்தளங்களில் பேச்சு சில வாரங்களாகவே இருந்து வந்தது.
கரீனா கபூரை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
இந்த படத்தில் கரீனா கபூர் ஹீரோயினாக நடித்து இருக்கிறார். Boycott Laal Singh Chaddha என ட்விட்டரில் ட்ரெண்ட் ஆன போது அவர் 'உங்களை யார் கட்டாயப்படுத்தினார்கள்' என பேசி இருந்தார்.
தற்போது படம் பாக்ஸ் ஆபிசில் படுதோல்வியை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில்ம, இப்போது கரீனா கபூர் அப்படியே தலைகீழாக பேசி இருக்கிறார். 'படத்தை புறக்கணிக்காதீர்கள். 2.5 வருடமாக இந்த படத்திற்கு 250 பேர் உழைத்து இருக்கிறார்கள்' என கூறி இருக்கிறார்.
இந்த இரண்டு வீடியோக்களையும் பதிவிட்டு நெட்டிசன்கள் அவரை கடுமையாக ட்ரோல் செய்து வருகின்றனர்.
ஸ்ருதிஹாசனின் அம்மாவும், கமல்ஹாசனின் முன்னாள் முனைவி சரிகாவா இது?- இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க, லேட்டஸ்ட்