கார்த்தியின் படத்தை பல கோடி கொடுத்த கைப்பற்றிய ஓடிடி நிறுவனம்.. எந்த படம் தெரியுமா
கார்த்தியின் லைன் அப்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் கார்த்தியின் நடிப்பில் அடுத்ததாக வெளியாகவுள்ள திரைப்படம் விருமண். முத்தையா இயக்கியுள்ள இப்படம் வருகிற ஆகஸ்ட் 12ஆம் தேதி திரைக்கு வருகிறது.
இதை தொடர்ந்து மணி ரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் செப்டம்பர் 31ஆம் தேதி வெளியாகிறது.
அதை தொடர்ந்து, பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்து முடித்துள்ள சர்தார் திரைப்படம் ஆக்டொபர் 24ஆம் தேதி தீபாவளி அன்று வெளியாகிறது.
படத்தை கைப்பற்றிய ஓடிடி நிறுவனம்
இந்த மூன்று படங்களும் வெளியாக தயாராக இருக்கும் நிலையில், கார்த்தியின் நடிப்பில் அடுத்ததாக உருவாகி வரும் திரைப்படம் தான் ஜப்பான்.
இப்படத்தின் அறிவிப்பு இதுவரை வெளிவரவில்லை. இப்படத்தை ராஜு முருகன் இயக்கி வருகிறார். இப்படம் அடுத்த ஆண்டு தீபாவளி அல்லது 2024ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், இப்படம் குறித்து இதுவரை அறிவிப்பு வெளிவராத நிலையில், பிரபல முன்னணி ஓடிடி நிறுவனமான நெட்பிளிக்ஸ் ரூ. 24 கோடி கொடுத்த இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
