விருமன் நிகழ்ச்சியை முடித்த கையோடு மதுரையில் பிரபல இடத்திற்கு சென்றுள்ள கார்த்தி- வீடியோவுடன் இதோ
விருமன் இசை வெளியீடு
நடிகர் கார்த்தி பார்த்து பார்த்து படங்கள் தேர்வு செய்து நடித்து வருகிறார். அவர் நடிப்பில் வெளியான கைதி, தீரன் திரைப்படங்கள் இப்போதும் மக்களால் கொண்டாடப்படுகிறது.
அப்படி நல்ல கதைகள் மூலம் மக்களை ஈர்த்துள்ள கார்த்தி நடிப்பில் அடுத்து வெளியாகப்போகும் திரைப்படம் தான் விருமன். கொம்பன், குட்டிபுலி, தேவராட்டம் போன்ற படங்கள் மூலம் நல்ல ரீச் பெற்றுள்ள முத்தையா தான் இப்படத்தை இயக்கியுள்ளார்.
இதில் நாயகியாக முதன்முறையாக அறிமுகமாகிறார் இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி.
இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா படு பிரம்மாண்டமாக மதுரையில் நேற்று நடந்தது.
கோவிலில் கார்த்தி
ஆடியோ வெளியீட்டு விழாவை மதுரையில் முடித்த கையோடு அங்கு பிரபலமான மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்றுள்ளார் காரத்தி. அப்போது எடுக்கப்பட்ட வீடியோ டுவிட்டரில் வைரலாகி வருகிறது.
மதுரையில் விருமன் பட விழா முடித்த நாளோடு இன்று அதிகாலை மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தரிசனத்தில் நடிகர் கார்த்தி. @Karthi_Offl #meenadchitemple #viruman @Suriya_offl @2D_ENTPVTLTD @dir_muthaiya @2D_ENTPVTLTD @rajsekarpandian pic.twitter.com/RoKVnoZTMQ
— Ramesh Bala (@rameshlaus) August 4, 2022
தனது குடும்பத்திற்காக சிவகார்த்திகேயன் மனைவி ஆர்த்தி செய்துள்ள விஷயம்- புகைப்படத்துடன் இதோ

ஹெலிகொப்டரிலிருந்து கொட்டிய பணம்: இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்களுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி News Lankasri
