கார்த்தி படத்தில் இந்த முன்னணி காமெடி நடிகரா? வெளியான அசத்தல் அப்டேட்
கார்த்தி
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் கார்த்தி. வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் மெய்யழகன்.
பிரேம் குமார் இயக்கிய இப்படத்தில் கார்த்தியுடன் இணைந்து அரவிந்த் சாமி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ள மெய்யழகன் திரைப்படம் வசூலில் பட்டையை கிளப்பியது.
மெய்யழகன் படத்தை தொடர்ந்து கார்த்தி பிரபல இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் நடித்து வரும் படம் தான் வா வாத்தியாரே. இதை தவிர கைதி 2 உருவாகவுள்ளது.
அசத்தல் அப்டேட்
இந்நிலையில், கார்த்தி படத்தில் இணையும் முக்கிய காமெடி நடிகர் குறித்து லேட்டஸ்ட் அப்டேட் வெளிவந்துள்ளது.
அதாவது கார்த்தியின் படத்தில் நடிக்க வடிவேலுவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளிவரும் என எதிர்பாக்கப்படுகிறது.

அதிக சம்பளம் தரும் வேலையை விட்டு UPSC தேர்வில் வெற்றி பெற்று IPS அதிகாரியான பெண்ணின் கதை News Lankasri
