கதை திருட்டில் சிக்கிய விருமன்.. சூர்யா தயாரித்துள்ள படத்திற்கு ஏற்பட்ட சிக்கல்
கதை திருட்டில் விருமன்
முத்தையா - கார்த்தி கூட்டணியில் முதன் முதலில் வெளிவந்த திரைப்படம் கொம்பன். இப்படம் வெளிவரவிருந்த சமயத்தில் கதை திருட்டு வழக்கில் சிக்கியது.
இந்த விவகாரத்தை பாக்யராஜ் பேசி சுமுகமாக முடித்துவைத்தார். அதை தொடர்ந்து தற்போது மீண்டும் அதே பிரச்சனையில் விருமன் படமும் சிக்கியுள்ளது.
படம் வெளியாகுமா
ஆம், இணை இயக்குனர் ஒருவர் தன்னுடைய கதை தான் விருமன் என்று உரிமை கோரி எழுத்தாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார்.
இது சம்மந்தமாக ஆர்.கே. சுரேஷ் மற்றும் கார்த்தி சமாதானம் பேசி வருகிறார்களாம். ஏற்கனவே ஒரு முறை கதை திருட்டில் சிக்கிய அதே கூட்டணி, தற்போது மீண்டும் கதை திருட்டு புகாரில் சிக்கியுள்ளார்கள்.
இதனால் நாளை மறுநாள் சூர்யா தயாரித்து வெளியாகவுள்ள விருமன் திரைப்படம் வெளியாகுமா என்று கேள்வி எழுந்துள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கப்போகிறது என்று..

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
