'பணத்திற்காக அட்ஜஸ்ட்மென்ட் செய்கிறார்கள்'.. கார்த்திகை தீபம் சீரியல் நடிகை அதிர்ச்சி பேச்சு
கார்த்திகை தீபம் நடிகை
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில் கதாநாயகியாக தீபா எனும் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை ஆர்த்திகா. இவர் சீரியல் மற்றும் சினிமாவில் இருக்கும் அட்ஜஸ்ட்மென்ட் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.
அவர் பேசியது :
"அட்ஜஸ்ட்மென்ட் கேட்டு என்னிடம் வருபவர்களிடம், இப்போது தெரியாமல் வந்து கேட்டுடீங்க, இனிமேல் இப்படி என்னிடம் வந்து கேட்காதீங்க என்று வெளிப்படையாக கூறிவிடுவேன். ஏன் என்றால் சீரியல் மற்றும் சினிமா எனக்கு பெரிது கிடையாது. இந்த வேலை இல்லையென்றாலும், வேறு ஏதாவது ஒரு வேலைக்கு போய்விடுவேன்".
"சினிமாவில் பெரிய இடத்திற்கு வர வேண்டும் என்பதற்காக அட்ஜஸ்ட்மென்ட் செய்து பிரபலமாகும் வாழ்க்கை எனக்கு தேவை இல்லை. கடவுள் எனக்கு கொடுத்து இருக்கும் இந்த வாழ்க்கையை நாம் மிகவும் மதிக்கிறேன். இந்த வாழ்க்கையில் நான் மகிழ்ச்சியாக இருந்தாலே போதும், அதற்கு பணம் தேவையில்லை, பெயர் தேவையில்லை, நாம் நாமாகவே இருந்தால் மட்டுமே போதுமானது".
"சினிமாவில் பல பெண்கள் பெயருக்காக, பணத்திற்காக அட்ஜஸ்ட்மென்ட் செய்கிறார்கள். அவர்கள் அப்படி செய்வதால் தான், மற்ற பெண்களை பார்க்கும் போதும் இவர்கள் அட்ஜஸ்ட்மென்ட் செய்வார்கள் என நினைத்து வந்து கேட்கிறார்கள். அப்படி கேட்பவர்களை நாம் தவறாக சொல்ல முடியாது".
"அவர்களிடம் நாம் தெளிவாக சொல்லிவிட்டாலே போதும், அதே போல் எனக்கு கவர்ச்சியாக உடல் அணிய பிடிக்காது. இதனால் நான் முன்பே எல்லாத்தையும் கூறிவிடுவேன். அதற்காக பணம் குறைவாக கிடைத்தாலும், அதை பற்றி எனக்கு கவலை இல்லை" என கூறினார்.

நடிகை விஜயலட்சுமிக்கு 7 முறை கருக்கலைப்பு; பணம் பெற்ற சீமான் - வெளியான நீதிமன்றம் தீர்ப்பு IBC Tamilnadu
