Heart beat சீசன் 3 எப்போது ரிலீஸ்.. அப்டேட் கொடுத்த நடிகர் கார்த்திக் குமார்

By Karthick Raja Jun 27, 2026 04:20 AM GMT
Report

திரைப்படங்களை தாண்டி வெப் தொடர்கள் மீது ரசிகர்களுக்கு ஆர்வம் அதிகரித்துவிட்டது. கடந்த 2021-ஆம் ஆண்டுக்கு பின் தமிழிலும் பல்வேறு கதைக்களங்களில் வெப் தொடர்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.

Heart beat

இதில், ஜியோ ஹாட்ஸ்டாரில் கடந்த 2024-ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாக தொடங்கிய வெப் தொடர் தான் Heart beat. இரண்டு சீசன்கள் வெற்றிகரமாக நிறைவு பெற்ற நிலையில், 3-வது சீசன் எப்போது வெளிவரும் என ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.

Heart beat சீசன் 3 எப்போது ரிலீஸ்.. அப்டேட் கொடுத்த நடிகர் கார்த்திக் குமார் | Karthik Kumar About Heart Beat Season 3 Release

SuperGirl திரை விமர்சனம்

SuperGirl திரை விமர்சனம்

கடந்த ஜூன் 25-ஆம் தேதி முதல் Heart beat சீசன் 3 ஒளிபரப்பாக போகிறது என தகவல் வெளியானது. ஆனால், சில காரணங்களால் அன்றைய தேதியில் ஒளிபரப்பப்படவில்லை. இது Heart beat வெப் தொடர் ரசிகர்களுக்கு வருத்தத்தை அளித்தது.

Heart beat சீசன் 3 எப்போது ரிலீஸ்.. அப்டேட் கொடுத்த நடிகர் கார்த்திக் குமார் | Karthik Kumar About Heart Beat Season 3 Release

அப்டேட் கொடுத்த நடிகர் கார்த்திக்

இந்நிலையில், Heart beat வெப் தொடரில் விஜய் எனும் கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் கார்த்திக் குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சீசன் 3 ரிலீஸ் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார்.

Heart beat சீசன் 3 எப்போது ரிலீஸ்.. அப்டேட் கொடுத்த நடிகர் கார்த்திக் குமார் | Karthik Kumar About Heart Beat Season 3 Release

அதில், "நாங்கள் புரோமோ படப்பிடிப்பு நடத்திவிட்டோம்; பல எபிசோட்களையும் எடுத்துவிட்டோம்; எபிசோட் ஒளிபரப்பாகும் தேதியை சேனல் தான் முடிவு செய்யும்; சேனல் மிக விரைவில் புரோமோவை வெளியிடுவார்கள், அதன் மூலம் ரிலீஸ் தேதி தெரியவரும்" என கூறியுள்ளார்.

Heart beat சீசன் 3 எப்போது ரிலீஸ்.. அப்டேட் கொடுத்த நடிகர் கார்த்திக் குமார் | Karthik Kumar About Heart Beat Season 3 Release

தற்போது வெளிவரும் தகவலின்படி ஜூலை மாதம் இறுதியில் தான் Heart beat சீசன் 3 வெளிவரும் என கூறப்படுகிறது. ஆனால், அதிகாரப்பூர்வமான எந்த ஒரு அறிவிப்பும் குழுவிடமிருந்து வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US