அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் கருப்பு படம் எப்போது ரிலீஸ்.. வெளிவந்த தகவல் இதோ
கருப்பு
ஆர். ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் கருப்பு. இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ளனர்.

இப்படத்தில் திரிஷா, அனாகா, இந்திரன்ஸ், நட்டி நட்ராஜ், சுவாசிகா என பலரும் நடித்துள்ளனர். சாய் அப்யங்கர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்திலிருந்து வெளிவந்த முதல் பாடல் 'God Mode' நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
எப்போது ரிலீஸ்
அடுத்ததாக இரண்டாவது பாடல் விரைவில் வெளிவரும் என இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி சமீபத்தில் கூறியிருந்தார். அந்த இரண்டாவது பாடலுடன் கருப்பு படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால் கருப்பு படத்தை ஏப்ரல் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.