தமிழ்நாட்டில் கருப்பு திரைப்படத்திற்கு கிடைத்துள்ள லாபம்.. எவ்வளவு தெரியுமா
கருப்பு
இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில், சூர்யா நடித்து வெளிவந்த திரைப்படம் கருப்பு. 2026-ஆம் ஆண்டு பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளியான இப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது.

இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து திரிஷா, அனாகா, இந்திரன்ஸ், ஸ்வாசிகா, ஷிவதா என பலரும் நடித்திருந்தனர். சாய் அப்யங்கர் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். கடந்த மே மாதம் வெளியான கருப்பு திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் கூட, பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் வரவேற்பை பெற்றது.

லாபம்
உலகளவில் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டிலும் இப்படம் வசூலில் சாதனை படைத்தது. கிட்டதட்ட ரூ. 175 கோடிக்கும் மேல் இப்படம் தமிழகத்தில் வசூலித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் இப்படம் எவ்வளவு லாபத்தை தந்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் தமிழ்நாட்டில் செய்த வசூல் மூலம் ரூ. 40 கோடிக்கும் மேல் லாபத்தை தந்துள்ளது. இது சூர்யாவின் திரை வாழ்க்கையில் மாபெரும் வசூல் சாதனையாகும்.
