விஜய் கைது செய்யப்படுவாரா? முதல்வர் ஸ்டாலின் கொடுத்த அதிரடியான பதில்
39 பேர் பலி
நடிகரும், தவெக கட்சியின் தலைவருமான விஜய் தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். நேற்று நாமக்கல் மற்றும் கரூரில் பரப்புரையை விஜய் மேற்கொண்டார்.
பிற்பகல் நாமக்கல்லில் தனது பேச்சை முடித்துவிட்டு இரவு கரூருக்கு வந்த விஜய்யை காண பல்லாயிரம் பேர் திரண்டிருந்தனர். இதில், கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் பலியாகியுள்ளனர். அதில் 10 குழந்தைகள் மற்றும் 16 பெண்கள் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது மிகப்பெரிய துயரத்தை அனைவருக்கும் கொடுத்துள்ளது.
விஜய் கைது செய்யப்படுவாரா?
இந்த சம்பவம் நடந்த சில மணி நேரங்களில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கரூருக்கு சென்று, பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தார். இறந்தவர்களுக்கு தனது இறுதி அஞ்சலியை செலுத்தினார்.
இதன்பின் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசிய ஸ்டாலினிடம், 'விஜய் கைது செய்யப்படுவாரா' என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு ஸ்டாலின் அவர்கள் அளித்த பதில், "நடந்த துயரத்தை பார்த்து வீட்டில் இருக்க முடியவில்லை. சம்பவம் தொடர்பாக ஒரு நபர் ஆணையம் அமைக்க உத்தரவிட்டுள்ளேன். அரசியல் நோக்கத்தோடும் எதையும் கூற விரும்பவில்லை. ஒரு நபர் ஆணையம் மூலம் உண்மை வெளிவரும், ஆணையம் அளிக்கும் அறிக்கையின்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என கூறியுள்ளார்.