கதல் திரை விமர்சனம்
பாலிவுட்டில் தற்போதெல்லாம் சாதிக்கு எதிராகவும், அதுக்குறித்த விவாதத்தை ஏற்படுத்தும் படங்கள் நிறைய வந்துள்ளது. அந்த வகையில் தற்போது யஷோவர்தன் இயக்கத்தில் OTT-யில் வெளிவந்துள்ள படம் தான் கதல்.
கதல் கதைகளம்
கதல் என்றால் தமிழில் பலாப்பழம். MLA ஒருவரின் வீட்டில் இரண்டு பலாப்பழம் திருடுப்போகிறது. அதை எப்படியாவது கண்டுப்பிடித்து கொடுக்க வேண்டும் என்று உத்தரவு இட, அந்த கேஸ் படத்தின் நாயகி சானியா மல்கோத்ராவிடம் வருகிறது.
சானியா ஒரு பிற்படுத்தப்பட்ட வகுப்பினை சார்ந்தவர். SI ஆக இருக்கும் இவர் தன்னுடன் வேலைப்பார்க்கும் ஒரு கான்ஸ்டபுளை தான் காதலிக்கிறார். அவரோ உயர் வகுப்பினர்.
அவரும் SI ஆனால், தான் திருமணம் நடைப்பெறும் தன் காதலனுக்கு ப்ரோமோஷன் கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த கேஸை சானியா கையில் எடுக்க, அந்த MLA வீட்டில் வேலைப்பார்க்கும் தோட்டக்காரர் மகள் பலாப்பழம் திருடு போன அதே நாளில் காணாமல் போகிறார். இது இரண்டிற்கும் என்ன கனேக்ஷன் என்பதை படத்தை பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்.
படம் எப்படி இருக்கு
ஒரு பெண் காணமல் போகிறார் என்ற சென்சிட்டிவ் ஆன கதையை பலாப்பழத்துடன் ஆரம்பித்து, படம் முழுவதும் டார்க் காமெடிகளை அள்ளி தெளித்து திரைக்கதையில் அசத்தியுள்ளார் இயக்குனர்.
வட இந்தியாவில் போலிஸாகவே இருந்தாலும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை எப்படி பார்க்கிறார்கள் என்பதை காட்டிய விதம் அதை கொஞ்சம் கூட கண்டுக்கொள்ளாமல் இனி என்னை திட்டு நான் முன்னேறி போய்கிட்டே இருப்பேன் என்ற சானியா attitude சபாஷ். Netflix தளத்தில் வந்துள்ள இந்த படத்தை கண்டிப்பாக பாருங்கள்..
ஏ.ஆர் முருகதாஸ் உட்பட 7 உதவி இயக்குனர்களுக்கு இப்படி ஒரு விஷயத்தை வாங்கி கொடுத்தாரா எஸ்.ஜே சூர்யா! என்னவென்று தெரியுமா