தன்பாலின ஈர்ப்பாளராக நடித்திருக்கும் மம்மூட்டி.. இதுவரை காதல் தி கோர் திரைப்படம் செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?
காதல் தி கோர்
கடந்த 2021 -ம் ஆண்டு வெளியான தி கிரேட் இந்தியன் கிச்சன் என்ற படத்தின் மூலம் பிரபல இயக்குனராக மாறியவர் தான் ஜியோ பேபி.
தற்போது இவர் இயக்கத்தில் மம்மூட்டி நடிப்பில் உருவாகியுள்ள காதல் தி கோர் திரைப்படம் 23 ம் தேதி வெளிவந்தது.
இப்படத்தில் மம்மூட்டி தன்பாலின ஈர்ப்பாளராக நடித்திருப்பது பிரபல நட்சத்திரங்கள், ரசிகர்கள் உள்பட பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

வசூல்
தற்போது காதல் தி கோர் திரைப்படம் விமர்சன ரீதியாக பாராட்டுகளைப் பெற்று வருகிறது. இந்நிலையில் இப்படம் வெளியாகி 5 நாட்களில் உலகளவில் ரூ.6 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
தன்பாலின ஈர்ப்பாளர்களை ஆதரிக்கும் வகையில் இப்படம் உருவாகியுள்ளதால் கத்தார், குவைத் மற்றும் அமீர போன்ற நாடுகளில் இப்படத்திற்கு தடை விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

நெதன்யாகுவின் அழுத்தம்... அணு ஆயுதத் தாக்குதலுக்கும் ட்ரம்ப் தயாராகலாம்: அம்பலப்படுத்தும் கார்ல்சன் News Lankasri
Bigg Boss 10: முனியம்மாவின் Luxury ஷாப்பிங்.... மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த போட்டியாளர்கள் Manithan