இரண்டு நாட்களில் காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்
விருமன் படத்தை தொடர்ந்து முத்தையா இயக்கத்தில் உருவாகி கடந்த 2ஆம் தேதி வெளிவந்துள்ள திரைப்படம் தான் காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்.
கதாநாயகனாக ஆர்யா நடிக்க சித்தி இத்னானி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் பிரபு, பாக்கியராஜ், ஆடுகளம் நரேன், விஜி சந்திரசேகர் உள்ளிட்ட பல நட்சத்திரங்களும் இப்படத்தில் நடித்திருந்தனர்.

கலவையான விமர்சனங்களை பெற்று வரும் இப்படம் வசூலில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஆம், இப்படம் வெளிவந்து இரண்டு நாட்களில் முடிவுக்கு வந்துள்ள நிலையில் இரண்டு நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
வசூல் விவரம்
அதன்படி காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் திரைப்படம் வெளிவந்து இரண்டு நாட்களில் ரூ. 4.5 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

B மற்றும் C சென்டர்களில் இப்படத்திற்கு நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ளது என கூறப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்கிறது என்று.
கிசுகிசுக்கப்படும் காதலருடன் இரவில் ஒன்றாக சென்ற நடிகை தமன்னா.. வைரலாகும் புகைப்படம்
உச்சநீதிமன்ற உத்தரவை மீறி.. திருப்பரங்குன்றம் உச்சிப்பிள்ளையார் கோவிலில் தீபம் ஏற்றிய தமிழக அரசு News Lankasri
இந்தியாவின் துணை கேப்டனாக இருந்தவர்; இந்தியாவிற்கு எதிராக சதமடித்து அசத்திய ஹர்பிரீத் சிங் News Lankasri