ரெடியாகும் சில்லுனு ஒரு காதல் இரண்டாம் பாகம்!! யார் ஹீரோ தெரியுமா?
சில்லுனு ஒரு காதல்
90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் காதல் படங்கள் லிஸ்டில் சில்லுனு ஒரு காதல் திரைப்படமும் நிச்சயம் இருக்கும்.
என்.கிருஷ்ணன் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் கடந்த 2006 -ஆம் ஆண்டு வெளியான சில்லுனு ஒரு காதல் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படத்தில் ஜோதிகா, பூமிகா, வடிவேலு எனப் பல பிரபலங்களும் நடித்துள்ளனர். படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். படத்தில் ஸ்ரேயா கோஷல் பாடிய "முன்பே வா" பாடல் தற்போது வரை ரசிகர்களின் ப்ளே லிஸ்டில் இருந்து வருகிறது.
யார் ஹீரோ?
இந்நிலையில் தற்போது சில்லுனு ஒரு காதல் இரண்டாம் பாகத்தை எடுக்க படக்குழு திட்டமிட்டு உள்ளனர். இப்படத்தில் ஹீரோவாக கவினை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெளிநாட்டவர்களில் சிலரது பாஸ்போர்ட்களை ரத்து செய்யும் வகையில் சட்டத்தில் மாற்றங்கள்: ஜேர்மனி திட்டம் News Lankasri
