தமிழில் பேசாததற்கு இதுதான் காரணம்.. பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நடிகை கயாடு லோஹர் ஓபன் டாக்

By Kathick Mar 31, 2026 12:00 PM GMT
Report

கயாடு லோஹர்

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளிவந்த டிராகன் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை கயாடு லோஹர். முதல் தமிழ் படமே மாபெரும் வெற்றியை இவருக்கு கொடுத்தது. இதற்கு முன் கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் படங்கள் நடித்து வந்தாலும், டிராகன் தென்னிந்திய அளவில் நல்ல வரவேற்பை இவருக்கு தந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழில் பேசாததற்கு இதுதான் காரணம்.. பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நடிகை கயாடு லோஹர் ஓபன் டாக் | Kayadu Lohar Says Why She Not Talking Tamil

கயாடு லோஹர் நடிப்பில் அடுத்ததாக வெளிவரவிருக்கும் திரைப்படம் Pallichattambi. டோவினோ தாமஸ் ஹீரோவாக நடித்துள்ள இப்படம் ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக டோவினோ தாமஸ் மற்றும் கயாடு லோஹர் சமீபத்தில் சென்னைக்கு வந்திருந்தனர்.

எதிர்நீச்சல் சீரியலின் புதிய வில்லன் ராவணன் ஆதிமுத்துவின் மனைவி யார் தெரியுமா? ஷாக் கொடுத்த புரோமோ

எதிர்நீச்சல் சீரியலின் புதிய வில்லன் ராவணன் ஆதிமுத்துவின் மனைவி யார் தெரியுமா? ஷாக் கொடுத்த புரோமோ

ஓபன் டாக்

பத்திரிகையாளர்களை இருவரும் சந்தித்து படம் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்து வந்த நிலையில், தமிழில் பேசாததற்கு காரணம் என்னவென்று நடிகை கயாடு லோஹர் விளக்கமளித்தார்.

தமிழில் பேசாததற்கு இதுதான் காரணம்.. பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நடிகை கயாடு லோஹர் ஓபன் டாக் | Kayadu Lohar Says Why She Not Talking Tamil

அவர் கூறியதாவது, "நான் பல மொழி திரைப்படங்களில் பணிபுரிந்து வருகிறேன். அதே போல் நான் தென்னிந்தியாவை சேர்ந்தவளும் அல்ல. ஆனால், எனக்கு தென்னிந்திய மொழிகள் மிகவும் பிடிக்கும். அதனை சரளமாக பேச முயற்சி செய்து வருகிறேன். பல மொழிகளில் நடிக்கும்போது, மொழி தெரிந்தால்தான் படத்துடன் நம்மை இணைத்துக்கொள்ள முடியும். இது சற்று கடினமாக உள்ளது. எனக்கு கொஞ்சம் நேரம் கொடுங்கள். விரைவில் கற்றுக்கொள்கிறேன்" என கூறினார்.

தமிழில் பேசாததற்கு இதுதான் காரணம்.. பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நடிகை கயாடு லோஹர் ஓபன் டாக் | Kayadu Lohar Says Why She Not Talking Tamil

கயாடு லோஹர் கைவசம் தற்போது I'm Game, STR 49, இம்மார்ட்டல், இதயம் முரளி, தி பாரடைஸ், தாரம் ஆகிய படங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US