முன்னணி ஹீரோவுக்கு ஜோடியாகும் கயாடு லோஹர்.. இயக்குநர் யார் தெரியுமா?
கயாடு லோஹர்
இந்த ஆண்டு தமிழில் வெளியான டிராகன் படத்தின் மூலம் தென்னிந்திய அளவில் பிரபலமாகியுள்ளார் நடிகை கயாடு லோஹர். இவர் மலையாளத்தில் அறிமுகமாகி இன்று தென்னிந்திய அளவில் வளர்ந்து வரும் முக்கிய நடிகையாக இருக்கிறார்.
இவர் நடிப்பில் அடுத்ததாக இதயம் முரளி படம் தமிழில் உருவாகி வருகிறது. இப்படத்தில் அதர்வாவிற்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த நிலையில், கயாடு லோஹரின் அடுத்த புதிய திரைப்படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்த பட அப்டேட்
அதன்படி, இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் புதிய படத்தில் கயாடு லோஹர் நடிக்கவுள்ளாராம். இப்படத்தில் கதாநாயகனாக விஷால் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் இப்படத்தில் இரண்டு கதாநாயகிகள் என்றும், அதில் ஒருவராக கயாடு லோஹர் கமிட் ஆகியுள்ளார். மற்றொரு கதாநாயகி இன்னும் தேர்வு செய்யப்படவில்லை என தகவல் தெரிவிக்கின்றன. ஆனால், இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.