புதிய கார் வாங்கியுள்ள கயல் சீரியல் நடிகை அபிநவ்யா.. வீடியோவுடன் இதோ
அபிநவ்யா
ஜெயா டிவியில் செய்தி வாசிப்பாளராக தனது மீடியா பயணத்தை தொடங்கி இப்போது சின்னத்திரை நாயகியாக கலக்கி வருபவர் அபிநவ்யா.
நடிக்க தொடங்கி பிரியமானவள், கண்மணி, சிவா மனசுல சக்தி, சித்திரம் பேசுதடி போன்ற பல சீரியல்களில் நடித்திருக்கிறார். இப்போது சன் டிவியில் டாப் டிஆர்பியில் ஒளிபரப்பாகி வரும் கயல் தொடரில் ஆனந்தி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இவர் சீரியல் நடிகர் தீபக் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார்.
புதிய கார்
சின்னத்திரை பிரபலங்கள் தொடர்ந்து புதிய வீடு, கார் வாங்கிவரும் நிலையில் நடிகை அபிநவ்யா புதிய கார் வாங்கிய செய்தி வீடியோவுடன் வெளியாகியுள்ளது.
ஆமாம் சீரியல் நடிகை அபிநவ்யா சமீபத்தில் புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார், அப்போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாக ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.