இசை நிகழ்ச்சியில் ரசிகர்களுடன் விஜய்யின் பாடலுக்கு நடனமாடிய நடிகை கீர்த்தி சுரேஷ்! வைரலாகும் வீடியோ
கீர்த்தி சுரேஷ்
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.
தென்னிந்தியளவில் பெரிய ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ள நடிகை கீர்த்தி சுரேஷின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரியளவில் வரவேற்பை பெற்று வருகிறது.
அந்த வகையில் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலினுடன் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள மாமன்னன் திரைப்படம் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கி இருக்கிறது.

இசை நிகழ்ச்சி
இந்நிலையில் பிரபல இசையமைப்பாளர் அனிருத்தின் இசை நிகழ்ச்சி சமீபத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் அவ்வளவு பெரிய ரசிகர்கள் கூட்டத்தில் நடிகை கீர்த்தி சுரேஷும் கலந்து கொண்டுள்ளார்.
அப்போது அனிருத் பாடிய மாஸ்டர் திரைப்படத்தின் பாடலுக்கு கீர்த்தி நடனமாடி இருக்கிறார். அந்த வீடியோ தான் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
Kutti Story Vibe ❤️ @KeerthyOfficial
— Filmy Kollywud (@FilmyKollywud) October 31, 2022
pic.twitter.com/NWHOVAoSAJ
கார்த்தியின் சர்தார் மொத்தமாக இதுவரை செய்துள்ள மொத்த வசூல்