விஜய் நடிக்க மாட்டாருனு சொன்னதும் ஒரே அழுகை.. நடிகை கீர்த்தி சுரேஷ் பேட்டி
சைரன்
ஜெயம் ரவி மற்றும் கீர்த்தி சுரேஷ் இருவரும் சேர்ந்து நடித்துள்ள சைரன் திரைப்படம் வருகிற 16-ம் தேதி வெளியாகவுள்ளது. தற்போது படக்குழுவினர் தீவிரமாக ப்ரோமோஷன்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

பேட்டி
இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துக்கொண்ட கீர்த்தி சுரேஷ் மற்றும் ஜெயம் ரவியிடம், விஜய்யின் அரசியல் வருகை குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
ஜெயம் ரவி பேசுகையில், "தளபதி விஜய் நமக்கு நிறைய நல்ல படங்களை கொடுத்து இருக்கிறார். அவர் நடித்த படங்களை நாம் மீண்டும் பார்க்கலாமே" என கூறினார்.
இதை அடுத்து பேசிய கீர்த்தி சுரேஷ், "தளபதி விஜய் தரமான படங்களை ரசிகர்களுக்காக கொடுத்துள்ளார். அரசியல் அவருடைய அடுத்தகட்டம். நாம் ஆதரவு கொடுக்கவேண்டும். விஜய் சார் நடிக்க மாட்டேன் என்று சொன்னதும் குழந்தை அழுந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பார்த்தேன். ஒரு குழந்தைக்கே அப்படி இருக்கு என்றால், அதுபோல நமக்கும் இருக்கும்" என்று கீர்த்தி சுரேஷ் கூறியுள்ளார்.
