அட்லீ படத்தில் பிரபல நடிகருடன் Bold-ஆன முத்த காட்சியில் நடித்துள்ள கீர்த்தி சுரேஷ்.. பாலிவுட் போனதும் இப்படியா
நடிகை கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த நிலையில், முதல் முறையாக பாலிவுட் பக்கம் களமிறங்கியுள்ளார்.
அட்லீ தயாரிப்பில் உருவாகும் பேபி ஜான் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் கீர்த்தி. இப்படத்தில் பாலிவுட் நடிகர் வருண் தவான் ஹீரோவாக நடிக்க வாமிகா கேபி என்பவர் இரண்டாம் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
தமிழில் 'கீ' எனும் படத்தை இயக்கிய கலீஸ் என்பவர் தான் இப்படத்தை இயக்குகிறார். விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் வெளிவந்த தெறி படத்தின் இந்தி ரீமேக் தான் பேபி ஜான் என்பது குறிப்பிடத்தக்கது.
முத்த காட்சியில் கீர்த்தி
இந்த நிலையில், இப்படத்தில் வருண் தவானுடன் Bold-ஆன முத்த காட்சியில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுவரை கீர்த்தி சுரேஷ் அப்படி எந்த திரைப்படத்திலும் நடித்து இல்லை என்றும் இதுவே முதல் முறையாகும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷ் ரூ. 4 கோடி சம்பளம் வாங்கியுள்ளார் என தகவல் தெரிவிக்கின்றனர்.
இந்த தகவல் தற்போது இணையத்தில் பரவி வருகிறது. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.