லுங்கியில் செம குத்தாட்டம் போட்ட கீர்த்தி சுரேஷ்- என்னம்மா ஆடுறாங்க பாருங்க, என்ன பாடல் தெரியுமா?
கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ், கொஞ்சம் உடல் எடையுடன் அழகாக பாவாடை தாவணியில் நடிக்க தொடங்கி மக்களை கவர்ந்தவர். மகாநதி என்ற படத்திற்காக தேசிய விருது எல்லாம் வாங்கினார். இப்போது உதயநிதியுடன் மாமன்னன், சிரஞ்சீவியுடன் போலோ சங்கர் என 4 படங்களில் நடித்து வருகிறார்.
சினிமாவில் நுழைந்த சில வருடங்களிலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய கீர்த்தி சுரேஷ் இப்போது உடல் எடையை எல்லாம் குறைத்து ஆளே மாறிவிட்டார்.
தற்போது நிறைய போட்டோ ஷுட்கள் எடுத்த வண்ணம் இருக்கிறார்.
செம குத்தாட்டம்
நானி, கீர்த்தி சுரேஷ், சமுத்திரக்கனி, மீரா ஜாஸ்மின் உள்ளிட்ட பலர் நடிக்க ஸ்ரீகாந்த் என்பவர் இயக்கியிருக்கும் திரைப்படம் தசரா. இப்படத்தின் தூம் தாம் என்ற பாடல் அண்மையில் வெளியாகி இருந்தது.
அப்பாடலுக்கு தனது தோழியுடன் லுங்கி கட்டிக்கொண்டு செம குத்தாட்டம் போட்டுள்ளார்.
USAவில் முதன்முறையாக தமிழ்ப்படம் செய்துள்ள சாதனை- மாஸ் காட்டும் பொன்னியின் செல்வன்