கீர்த்தி சுரேஷ் எல்லாம் ஒரு மூஞ்சியா.. திரையுலகில் நடந்த மாபெரும் அதிர்ச்சியளிக்கும் விஷயம்
கீர்த்தி சுரேஷ்
தென்னிந்திய திரையுலகில் சிறந்த நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். மகாநடி படத்திற்காக சிறந்த நடிகை எனும் தேசிய விருதையும் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் மலையாள திரையுலம் மூலம் என்ட்ரி கொடுத்தாலும், தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தான் பிசியாக நடித்து வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த மாமன்னன் திரைப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ளது.
நடிகை கீர்த்தி சுரேஷ் குறித்து இதுவரை பல சர்ச்சைகள் இணையத்தில் கிசுகிசுக்கப்பட்டுள்ளது.ஆனால், திரையுலகில் உள்ள சிலர் அவரை தவறாக பேசி விமர்சனம் செய்துள்ளனர். அப்படி நடந்த சம்பவம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
இதெல்லாம் ஒரு மூஞ்சியா
அதன்படி, மகாநடி படத்தில் சாவித்திரியாக நடிக்க பல நடிகைகளின் பெயர் லிஸ்ட்டை இயக்குனர் வைத்திருந்தாராம். ஆனால், அவர் தேர்வு செய்தது நடிகை கீர்த்தி சுரேஷை மட்டும் தான். இதை கேள்விப்பட்ட சிலர் 'இதெல்லாம் எப்படி இந்த ரோலில் நடிக்க போகுதுனு' தவறான முறையில் விமர்சனம் செய்துள்ளனர்.
அதன்பின் படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ், நடிகை சாவித்திரியை நம் கண்முன் நிறுத்தி தேசிய விருதையும் வென்றார். இதை தொடர்ந்து உடல் எடையை குறைத்த கீர்த்தி சுரேஷ் மீண்டும் சிலருடைய விமர்சனங்களில் சிக்கினார். 'அவ்வளவுதான் கீர்த்தியோட மார்க்கெட் போச்சு', இதெல்லாம் ஒரு மூஞ்சியா' என கூறியுள்ளனர்.
ஆனால், இதையெல்லாம் கண்டுகொள்ளாத கீர்த்தி தொடர்ந்து தனது சிறப்பான நடிப்பினால் முன்னணி நடிகை எனும் அந்தஸ்தை அப்படியே தக்க வைத்துள்ளார். இப்படி சினிமா துறைக்குள் கீர்த்தி சுரேஷ் குறித்து விமர்சனம் செய்தனர் என்பது பற்றி பிரபல பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய்யின் லியோ படப்பிடிப்பில் இருந்து புகைப்படங்கள் வெளியிட்ட பிக்பாஸ் புகழ் இலங்கை பெண் ஜனனி- குவியும் லைக்ஸ்