நிகழ்ச்சியில் மிஷ்கின் என்னை தவறாக தொட்டாரா?... சர்ச்சைக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் விளக்கம்
நிகழ்ச்சி
கீர்த்தி சுரேஷ், தமிழ் மற்றும் தெலுங்கில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கும் நடிகை. கடைசியாக இவரது நடிப்பில் டோரதி, ரிவால்வர் ரீட்டா ஆகிய படங்கள் வந்தன.
இதில் கீர்த்தி சுரேஷிற்கு டோரதி படம் மட்டுமே வெற்றியை கொடுத்தது, ஆனால் இதில் கொஞ்ச நேரம் மட்டுமே இவரது காட்சிகள் வரும்.

புதிய படம்
அடுத்து கீர்த்தி சுரேஷ் நடிப்பில் சத்தியவான் சாவித்திரி என்ற படம் வெளிவர உள்ளது.
அறிமுக இயக்குனர் பிரவீன் இயக்கும் இப்படத்தில் கீர்த்தியுடன் மிஷ்கினும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார், நாளை படம் வெளியாக இருக்கிறது. இப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு அண்மையில் நடக்க படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் மிஷ்கின் டோரதி படத்தில் நடித்ததற்காக கீர்த்தி சுரேஷிற்கு தங்க மோதிரத்தை பரிசளித்த அவரைப் பற்றி பெருமையாக பேசியிருந்தார். கை பிரச்சனை அப்படி அவர் பேசும்போது கீர்த்தி சுரேஷின் காலில் மிஷ்கினின் கை பட்டது.
கீர்த்தியும் அதை கவனித்து அவர் கையிடம் தன் கையை கொண்டு வந்தார். அதற்குள் மிஷ்கின் கையை எடுத்துவிட்டார். இதைப்பார்த்த ரசிகர்கள் மிஷ்கின் செய்ததை கீர்த்தி விரும்பவில்லை, மோசமான தொடுகை என விமர்சனம் செய்தனர்.
கீர்த்தி சுரேஷ் பதிலடி: இந்த நிலையில் இதுகுறித்து கீர்த்தி சுரேஷ் தனது சமூக வலைதள பக்கத்தில், முதலில் எனது முகத்தில் உங்களுக்கு எங்கே அசௌகரியம் தெரிந்தது?

நாங்கள் இரண்டு பேரும் தந்தை - மகள் போன்ற உறவை பகிர்ந்துகொள்கிறோம் என்று அவரும் நானும் சொன்னது உங்கள் காதுகளுக்கு கேட்கவில்லையா? என பதிலடி கொடுத்துள்ளார்.