கீர்த்தி திருமணத்தில் விஜய் குறித்து நெகட்டிவ் கமெண்ட்ஸ்.. இதுதான் நடந்தது!! ப்ரீத்தி ஓபன்
கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். சமீபத்தில் கோவாவில் இவருடைய திருமணம் விமர்சையாக நடைபெற்றது.
தன் 15 வருட காதலரான ஆண்டனியை கீர்த்தி சுரேஷ் கரம்பிடித்தார். இவர்கள் திருமணத்திற்கு விஜய், த்ரிஷா, அட்லீ என பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
இந்நிலையில், இந்த திருமணத்தில் கலந்து கொண்ட ப்ரீத்தி, கீர்த்தி சுரேஷ் திருமணம் குறித்து பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
இதுதான் நடந்தது!!
அதில், " கீர்த்தி சுரேஷ் திருமணத்தில் விஜய் வருவார் என்பது யாருக்கும் தெரியாத ஒன்று, சர்ப்ரைசாகத்தான் அவர் வந்தார். திருமணம் முடிந்த உடன் சென்று விட்டார். ஆனால், அது குறித்து மிகவும் தவறாக பேசினார்கள்.
அது மட்டுமின்றி, கீர்த்தி சுரேஷ் புது தாலியுடன் பேபி ஜான் ப்ரோமோஷனுக்கு வந்தது குறித்தும் பல விதமான நெகட்டிவ் விமர்சனங்களை கூறி வருகின்றனர்.
ஆனால், அந்த மஞ்சள் கயிறு அணிந்து கொள்ள ஒவ்வொரு பெண்ணும் விருப்பப்படுவார்கள். நயன்தாராவும் இதே போல தான் தாலி வெளியே தெரியும்படி போட்டோஷூட் எடுத்திருந்தார்.
நயன்தாரா செய்தால் அது தவறு இல்லை, கீர்த்தி சுரேஷ் செய்தால் மட்டும் அது தவறா?தற்போது இணையத்தில் வரும் வதந்திகளை கண்டால் வாழவே முடியாது" என்று கூறியுள்ளார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்னர் சார்லஸ்: ராஜ குடும்பத்துக்கு கவலையை உருவாக்கியுள்ள விடயம் News Lankasri
