KGF யாஷ், டாக்ஸிக் படத்தில் நடிக்க வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா
யாஷ்
கன்னட சினிமாவில் மிகவும் வெற்றிகரமான மற்றும் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவர் யாஷ். பிரசாந்த் நீல் இயக்கத்தில் இவர் நடித்து வெளிவந்த கே.ஜி.எப் 1 மற்றும் கே.ஜி.எப் 2 படங்கள் இந்திய சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
இந்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது. அதை தொடர்ந்து யாஷ் தற்போது அவருடைய 19வது திரைப்படமான டாக்ஸிக் படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தை பிரபல நடிகையும் இயக்குனருமான கீது மோகன் தாஸ் இயக்குகிறார். கேவிஎன் புரோடக்சன்ஸ் தயாரிக்கும் இப்படம் இந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டது.
எவ்வளவு தெரியுமா
மேலும், இப்படத்தில் கியாரா அத்வானி, ஹுமா குரேஷி, நயன்தாரா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்நிலையில், டாக்ஸிக் படத்தில் நடிக்க யாஷ் வாங்கியுள்ள சம்பளம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, யாஷ் டாக்ஸிக் படத்திற்காக ரூ. 50 கோடி சம்பளம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.