கீர்த்தி சுரேஷுக்கு அவருடன் திருமணமா? முதல்முறையாக வாய்திறந்த அம்மா மேனகா
கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என தொடர்ந்து செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. கடந்த சில வருடங்களாகவே இப்படி ஒரு செய்தி பரவுவதும் அதன் பின் கீர்த்தி குடும்பத்தினர் விளக்கம் கொடுப்பதுமாக பல முறை நடந்திருக்கிறது.
தற்போது கீர்த்தி அவரது பள்ளி நண்பர் ஒருவரை காதலித்து வருவதாகவும், 10 வருட காதலுக்கு பிறகு அவரை தான் திருமணம் செய்ய போகிறார் என்றும் தகவல் பரவி வந்தது.
அம்மா மேனகா விளக்கம்
இந்நிலையில் கீர்த்தி சுரேஷின் அம்மா மேனகா ஒரு பேட்டியில் இந்த செய்தி பற்றி விளக்கம் கொடுத்து இருக்கிறார். "கீர்த்தி சுரேஷ் திருமணம் பற்றி பரவும் தகவல் முற்றிலும் பொய்யானது, அது பற்றி வேறு எதுவும் நான் பேச விரும்பவில்லை" என மேனகா கூறி இருக்கிறார்.
குக் வித் கோமாளி 10வது போட்டியாளர் இவர்தான்! ரகசியமாக வைத்திருக்கும் விஜய் டிவி