கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் இணைந்து நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்.. இதோ
கீர்த்தி சுரேஷ்
திரையுலகில் என்ட்ரி கொடுத்த குறுகிய காலகட்டத்திலேயே தேசிய விருதை வென்றவர் நடிகை கீர்த்தி சுரேஷ். மகாநடி திரைப்படத்தில் நடிகையர் திலகம் சாவித்திரி போலவே நடித்து அனைவரையும் மிரள வைத்தார்.

இதன்பின், இவர் ஹீரோயின் சப்ஜெக்டில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். சாணி காயிதம், ரகு தாத்தா, ரிவால்வர் ரீட்டா என பல ஹீரோயின் சப்ஜெக்டில் நடித்து வந்தார். ஆனால், மகாநடி போல் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்று தரவில்லை.
சத்தியவான் சாவித்திரி
இந்த நிலையில், அடுத்ததாக கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. பிரவீன் எஸ் விஜய் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் இணைந்து நடிக்கும் படத்திற்கு 'சத்தியவான் சாவித்திரி' என தலைப்பிட்டுள்ளனர்.

மேலும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர். மேலும், செகண்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
