நடிகை கீர்த்தி சுரேஷுக்கு திருமணம்.. நடிப்பை விட்டு விலக முடிவு

By Kathick Nov 26, 2022 07:00 AM GMT
Report

கீர்த்தி சுரேஷ்

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் தற்போது தமிழில் மாமன்னன் திரைப்படம் உருவாகி வருகிறது.

நடிகை கீர்த்தி சுரேஷுக்கு திருமணம்.. நடிப்பை விட்டு விலக முடிவு | Keerthy Suresh Quit Acting Because Of Marriage

மேலும் ஜெயம் ரவியுடன் இணைந்து சைரன் படத்தில் நடித்து வருகிறார். அதே போல் தெலுங்கில் போலோ சங்கர் மற்றும் தசரா ஆகிய இரு திரைப்படங்களை மட்டுமே கைவசம் வைத்துள்ளார்.

நடிப்பை விட்டு விலகல்

இந்த நான்கு படங்களை தவிர்த்து வேறு எந்த ஒரு படத்தையும் இதுவரை கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் செய்யவில்லை. இந்நிலையில், இதற்கு காரணம் என்னவென்றால் விரைவில் நடிப்பில் இருந்து விலக முடிவெடுத்துள்ளாராம் கீர்த்தி சுரேஷ்.

திருமணம்

அதுமட்டுமின்றி அவருடைய தாய், தந்தை கீர்த்தி சுரேஷுக்கு திருமணம் செய்துவைக்க முடிவு செய்து விட்டார்களாம். இதனால் தான் நடிப்பை விட்டு விலக கீர்த்தி முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கீர்த்தியை திருமணம் செய்துகொள்ளப்போகும் மாப்பிள்ளை யார் என்பது குறித்து எந்த ஒரு தகவல் இதுவரை வெளிவரவில்லை.

நடிகை கீர்த்தி சுரேஷுக்கு திருமணம்.. நடிப்பை விட்டு விலக முடிவு | Keerthy Suresh Quit Acting Because Of Marriage

நடிப்பில் இருந்து விலகினாலும், தயாரிப்பில் களமிறங்கி நல்ல படங்களை தயாரிக்க முடிவெடுத்துள்ளாராம் கீர்த்தி. விரைவில் இதுகுறித்து கீர்த்தியிடம் இருந்து அறிவிப்பு வெளியாகுமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்..

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US