கட்சி அறிவிப்பு செய்யும் போது ஒரேஒரு விஷயத்திற்காக வருத்தப்பட்ட விஜய்.. கீர்த்தி சுரேஷ் பகிர்ந்த தகவல்
நடிகர் விஜய்
நடிகர் விஜய் கோடான கோடி ரசிகர்களின் மனதில் நிலைத்து இருக்கும் ஒரு பிரபலம்.
இவர் படம் வெளியாகிறது என்றாலே தமிழ்நாடு திருவிழா கோலமாக இருக்கும், இப்போது அவரது நடிப்பில் அடுத்து கோட் படம் வெளியாக இருக்கிறது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள அவரது 68வது படம் குறித்து நேற்று ஒரு அப்டேட் வந்தது.
அதாவது கோட் படத்தின் 3வது சிங்கிள் நாளை ஆகஸ்ட் 3 வெளியாக இருக்கிறது.
கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ரகு தாத்தா படம் அடுத்து வெளியாக இருக்கிறது. வரும் ஆகஸ்ட் 15ம் தேதி படம் வெளியாகவுள்ள நிலையில் படக்குழுவினர் பேட்டிகள் கொடுத்து வருகின்றனர்.
அப்படி ஒரு பேட்டியில் விஜய்யின் அரசியல் என்ட்ரி குறித்து நடிகை கீர்த்தி சுரேஷிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், ரிவால்வர் ரீட்டா படம் நடித்துக்கொண்டிருந்த போது அங்கு பக்கத்திலேயே விஜய் அவர்களின் படப்பிடிப்பு நடந்து வந்தது,. அந்த நேரத்தில் தான் அவரது அரசியல் என்ட்ரி தகவல் வந்தது.
உடனே அவரை சந்தித்து நானும் உங்களது கட்சியில் ஒரு Membership எடுக்கிறேன், எனக்கு சந்தோஷம் என்றேன்.
எப்படி இருந்தது என கேட்டபோது, கடைசி படம் என்று எழுதும் போது கஷ்டமாக இருந்தது, ஆனால் சந்தோஷம் என்று விஜய் கூறியதாக கீர்த்தி சுரேஷ் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
