பாலிவுட் நடிகர் வருண் தவானுக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம் கற்றுக்கொடுக்கும் கீர்த்தி சுரேஷ்... கூல் வீடியோ இதோ
பேபி ஜான்
விஜய்யை வைத்து ராஜா ராணி படத்திற்கு பிறகு தெறி என்ற படத்தை இயக்கி மாஸ் ஹிட் கண்டார் அட்லீ. அப்படத்தின் மூலம் விஜய்யுடன் ஏற்பட்ட நெருக்கம் தொடர்ந்து மெர்சல், பிகில் போன்ற படங்களை இயக்கியிருந்தார்.
கடைசியாக பாலிவுட்டின் டாப் நாயகன் ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கினார், அப்படம் ரூ. 1000 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது. தற்போது அட்லீ படம் இயக்குவதை தாண்டி தயாரிப்பாளராக பிஸியாக உள்ளார்.
அவர் தான் இயக்கிய தெறி படத்தை ஹிந்தியில் தயாரித்துள்ளார். பேபி ஜான் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் வருண் தவான் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடித்துள்ளனர்.
படப்பிடிப்பு வீடியோ
இந்த நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாவில், பேபி ஜான் படப்பிடிப்பு தளத்தில் வருண் தவானுக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளை கற்றுக் கொடுத்துள்ளார்.
அந்த கலகலப்பான வீடியோவை கீர்த்தி சுரேஷ் வெளியிட ரசிகர்கள் லைக்ஸ் குவித்து வருகிறார்கள். இதோ அந்த வீடியோ,