சர்ச்சையில் சிக்கிய பிரித்விராஜின் படம்! இந்து அமைப்பினர் கடும் எதிர்ப்பு
நடிகர், பாடகர், இயக்குனர் என பன்முகம் கொண்டவர் பிரித்விராஜ் சுகுமாரன். இவர் தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
சமீபத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி ஜெய ஜெய ஜெய படத்தின் இயக்குனர் விபின் தாஸுடன் புதிய கூட்டணியில் இணைந்துள்ளார் பிரித்விராஜ். இப்படத்திற்கு குருவாயூர் அம்பல நடையில் என்று தலைப்பு வைத்துள்ளனர்.
மேலும் இப்படம் அனைவரும் ரசிக்கும் படி ஒரு பொழுதுபோக்கு படமாக இருக்கும் என்று தனது சோசியல் மீடியா பக்கத்தில் அறிவித்துள்ளார் நடிகர் பிரிதிவிராஜ்.
சர்ச்சை
இதைதொடர்ந்து குருவாயூர் அம்பல நடையில் என கடவுளின் பெயரை இப்படத்திற்கு தலைப்பாக வைத்துள்ளதால் இதற்கு கேரளாவில் உள்ள இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இப்படத்தில் வைத்திருக்கும் தலைப்பை மாற்ற வேண்டும் என்று படக்குழுவினர்களுக்கு மிரட்டல் விடுத்துள்ளனர்.
பிரின்ஸ் விநியோகஸ்தருக்கு பணம் திருப்பி கொடுத்த சிவகார்த்திகேயன்! எத்தனை கோடி?