11 நாளில் கேஜிஎப் 2 படைத்திருக்கும் பாக்ஸ் ஆபிஸ் சாதனை! நெருங்க முடியாத வசூல்
பீஸ்ட் படம் வெளியான மறுநாள் தான் கேஜிஎப் 2 படம் ரிலீஸ் ஆனது. பீஸ்ட் நெகடிவ் விமர்சனம் பெற்றது, மற்றும் கேஜிஎப் 2 நல்ல ரெஸ்பான்ஸ் பெற்றது.. என இரண்டும் சேர்த்து கேஜிஎப் 2 நல்ல வசூல் ஈட்ட காரணமாகி விட்டது.
11 நாள் சாதனை
குறிப்பாக ஹிந்தி பாக்ஸ் ஆபிஸில் கேஜிஎப் 2 தொடர்ந்து நல்ல வசூலை ஈட்டி வருகிறது. தற்போது 11 நாளில் ஹிந்தியில் மட்டும் 300 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்து இருக்கிறது.
இதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தென்னிந்திய படம் இவ்வளவு வசூல் குவித்து இருப்பதை பார்த்து ஹிந்தி சினிமா வட்டாரமே ஆச்சர்யத்தில் இருக்கிறது.

வசூலில் முக்கிய மைல்கல்லை தொட்ட கேஜிஎப் 2 (ஹிந்தி) எடுத்துக்கொண்ட நாட்கள்..
₹ 100 cr: Day 2
₹ 150 cr: Day 4
₹ 200 cr: Day 5
₹ 225 cr: Day 6
₹ 250 cr: Day 7
₹ 275 cr: Day 9
₹ 300 cr: Day 11