KGF படத்தின் இசையமைப்பாளர் சினிமாவிற்கு முன் இப்படியொரு வேலை செய்தாரா !
இசையமைப்பாளர் ரவி பாசூர்
இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான KGF 2 திரைப்படம் இந்தியா சினிமாவையே அதிரவைத்து வருகிறது.
இந்தியா முழுவதும் ஒரே நாளில் KGF 2 திரைப்படம் ரூ 240 கோடி வசூல் செய்துள்ளதாக அறிவித்து இருந்தனர்.
இன்று இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்துள்ள KGF படக்குழுவினர்கள் குறித்த பல்வேறு சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகி வருகிறது.
அதன்படி இப்படத்தின் இசையமைப்பாளர் ரவி பாசூர் இரும்பு கடையில் வேலை செய்வது போல ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது.
இதனை ரசிகர்கள் ரவி பாசூர் இப்படி வேலை செய்து வந்தவரா என ஆச்சர்யத்துடன் புகைப்படத்தை பகிர்ந்து வருகின்றனர்.
ஆனால் அந்த புகைப்படம் கொரோனா லாக்டோவ்ன் போது அவர் குடும்ப தொழிலை பொழுதுபோக்காக செய்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் அது.

நடிகர் விஜய்க்கும் இந்த விஷயத்திற்கும் செட்டே ஆகாது ! கலாய்க்கும் நெட்டிசன்ஸ்..